வெள்ளி, 28 ஜனவரி, 2011

Noyyal flows on like a quiet killer January 28th, 2011, deccan chronicle


 

Jan. 27: Our history is replete with anecdotes of rivers mothering civilizations along their banks. The lazy, meandering Noyyal river that originates from somewhere inside the Western Ghats and flows through Coimbatore and Tirupur districts covering a distance of 173 km before merging with the Cauvery near the Noyyal village (hence its name) in Karur district is no different. Archeologists have even found evidence of settlements along the Noyyal riverbanks engaged in trade with merchants from as far away as Greece and Rome.
From being a source of life, Noyyal has now turned into a huge drain bearing human excreta, industrial waste and all other forms of muck along its path. The extent of pollution is such that several villagers who live downstream have fled from the riverbanks fearing skin diseases and, in some cases, even their potency.
Like most rivers that flow from the majestic Western Ghats, Noyyal too is a culmination of several mountain streams that still boast of pristine, fresh water. One such source is Kovai Kutrallam situated about 40 km from Coimbatore.
Some say, the rain-fed river originates from this sweet-tasting mountain stream that still serves as the main water source for the tribal settlements along its banks. “If anyone who drinks this water is told that barely 150 km downstream, the same water could make one impotent, they would only laugh in disbelief. But, it is a truth,” says advocate and environmentalist M. Balamurugan who spent five long years shooting a documentary on the plight of Noyyal river.
As the mountain stream flows downhill, several other streams such as Mulvarambu, Koduvaipathi, Neeli join and form two major streams, the Periyaru and Chinnaru that eventually join together at Mathuvarayapuram to become Noyyal river just a few km away from Kovai. Despite locals using the river water for washing, bathing etc, it still retains its pristine nature and one can still see the clear riverbed where tiny fish move around.
When the river enters the Coimbatore city limits through Chitiraichavadi and Perur, strong semblances of urbanization are evident. Decayed and decomposed plastic bags, cups and food packets rot along the Noyyal banks that used to be crystal clear a just a little farther upstream.
“Not just that, sewage from all the municipalities surrounding Coimbatore and even from the city flow into the river as there is no proper sewage treatment facility anywhere in this district,” says Mr Muthu Murugan, another naturalist, who undertook a walk along the stretch of the river a few years ago to raise awareness among public on river pollution.
By the time it reaches the Okkadam lake, Noyyal is just a large sewage drain. But then, its impurities are not potent enough to make us impotent. From Okkadam, the river flows along Vellalur, Ondiyur, Irugur, Sulur and Somanur to reach the textile dyeing headquarters of Tirupur. When the river reaches the sleepy hamlet of Orathupalayam in Tirupur district, the TDS count (total dissolved solids) in Noyyal measures sometimes up to 17,000 ppm. None of the 200-odd families use the river water for anything as its health hazards have been proven.
From here until the river merges with the Cauvery with its pollutants, Noyyal scares anyone who dares to put up a settlement along its banks. From being a life giver, Noyyal turned to a live hazard, thanks to civilisation.

வியாழன், 27 ஜனவரி, 2011

தென்கிழக்காசியாவில் இந்து சமயத்தின் பரவல் - சிவநெறி உலகம் முழுவதும் கிருஷ்ணன், சிங்கை


சிவலிங்க வழிபாடு உலக முழுவதும் வியாபித்திருந்ததை ஆராய்ச்சியாளர்களும், புதைபொருள் ஆய்வாளர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். மொஞ்சதரோ, ஹரப்பா பகுதிகளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சிவன், அம்பாள் சிலைகள் 3250 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை எனக் கூறப்படுகிறது. இவ்விடங்களில் அகழ்வாய்வின் போது முத்திரை ஒன்றில் சிந்துவெளி நாகரிக காலத்தைச் சேர்ந்த சிவன், பசுபதி என்பதை உணர்த்தும் உருவத்துடன் சிவலிங்கங்களும் கிடைத்துள்ளன. புதைபொருள் ஆராய்ச்சியாளரான சர்.ஜான் மார்ஷல், சிந்து சமவெளி ஆராய்ச்சி  முடிவுகளில் மிக முக்கியமானது சைவத்தின் தொன்மையே. இன்றளவும் வழக்கில் உள்ள சமயங்களுக்குள் மிகப்பழமையானதாக சைவம் விளங்குகிறது என்கிறார்


இன்றளவும் வழக்கில் உள்ள மிகப் பழைமையான சமயமாக அது விளங்குகிறது!" என்கிறார். "வட அமெரிக்காவின் கொலராடோ  ஆற்றுப்பள்ளத்தாக்கில் அகழ்வாராய்ச்சி செய்த போதும் சிவலிங்கங்கள் கிடைத்துள்ளன.அங்குள்ள குன்றின் மேல் சிவன் கோயில் ஒன்று இடம் பெற்றிருந்தது.அது சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்" என்று இலங்கை அறிஞர்  ந.சி.கந்தையா,தனது "சிவன்" என்னும் நூலில் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்.மேலும் இவர்,ஆப்பிரிக்கா - ஐரோப்பா, மத்தியக் கிழக்கு, துரக் கிழக்கு, தென் கிழக்கு, தென் அமெரிக்கா, மெக்சிகோ, பசிபிக் தீவுகள் போன்ற பகுதிகளிலும் சிவ வழிபாடு இருந்ததைக் குறிப்பிடுகிறார்.

மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள "க்ரீட்" தீவின் நரகங்களுள் ஒன்றின் பெயர் "சிவன்". அங்கும் அகழ்வாராய்ச்சியின் போது ஏராளமான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளன.சிரியாவின் பழைய நகரங்களில் ஒன்றின் பெயர் "சிவாஸ்" ஹிட்டைட் நாட்டில் கிடைத்த புதைபொருட்களில் ஒன்றான பழங்கால  நாணயத்தில், சிங்க வாகனத்தில் வீற்றிருக்கும் ஆணின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன். இது நம் அம்மையப்பனை நினைவூட்டுகிறது.  லிபியா பாலைவனத்தில் உள்ள பாலைவனச் சோலை ஒன்றின் பெயர் "சிவன்" இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தைச் சார்ந்த புதைபொருள் அகழ்வாராய்ச்சியாளர்கள் பல சிவலிங்கங்களைக் கண்டுபிடித்துள்ளார்கள். ஜெர்மனியிலும் லிங்க வழிபாடு தழைத்திருந்தது. "ஷிண்டேயிசம்" எனும் ஜப்பானிய மத்ததில் லிங்க வழிபாடு முதன்மையானதாகக் கருதப்படுகிறது. ஆகவே, அங்கு பொது இடங்களில் லிங்கங்கள் வைத்து வழிபடப் பெற்றன.இவற்றின் மூலம் சிவநெறியும், இந்து சமயமும் உலகம் முழுவதும் பரவியிருந்ததை நாம் அறியலாம்

தென்கிழக்காசியாவில் இந்து சமயம்

கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்து சமயம் பல நூற்றாண்டுகளுக்கு முன் பரவியது.

சிவ வழிபாடு மிகவும் தொன்மை வாய்ந்தது என்பது தொல்பொருள் ஆராய்ச்சிகள் வாயிலாக மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய வெளி நாகரீகங்களில் காணலாம். இந்தியா நாட்டிற்கு அப்பாலும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்திருக்கிறது.

தமிழர் தம் பண்பாட்டில் மதம் இயற்கையாக இடம் பெற்றுள்ளது.நாகரித்தின் தொடக்க காலங்களில் மானுடச் சமூகத்தின் வளர்ச்சியில் மதம் ஆற்றல் மிக்க பங்களிப்பை நிகழ்த்தியிருக்கிறது.உண்மையில் தென்கிழக்கு ஆசிய மக்கள் முதலில் இந்து சமயத்தைத்தான் தழுவினர். அதனால்தான் அவர்களின் பழக்கவழக்கங்களிலும் பண்பாடுகளிலும் மொழிகளிலும் இந்து சமயத்தின் தாக்கம் இன்றும் உணரப்பட்டு வருகிறது.

பண்டைய இந்திய வணிகர்கள் தற்போதைய தென்கிழக்கு ஆசியப் பகுதியைச் சொர்ண பூமி என்று அழைத்தனர். பழங்கால சீன வணிகர்களில் பலர் இந்து சமயம் இந்த வட்டாரத்தில் பரவி இருந்ததை வரலாற்று குறிப்புகளாக எழுதி வைத்துள்ளனர். கம்போடியாவிலும் ஜாவாவிலும் இந்து சமயம் செழித்து வளர்ந்திருந்ததை கபாசியன் போன்ற சீன யாத்திரீகர்கள் தங்களது குறிப்புகளில் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தென்கிழக்காசியாவில் இந்து சமயம் பரவுவதற்குச் சோழர்களும் ஒரு காரணமாக இருந்துள்ளனர். பத்தாம்
நூற்றாண்டு வாக்கில் இராஜ ராஜ சோழன் தலைமையிலான படையெடுப்பு துவங்கியது. இராஜ ராஜ சோழனின் புதல்வர்  இராஜேந்திர சோழன் மலாயாவை ஆட்சி புரிந்து விஜயா பேரரசைக் கைப்பற்றினான். அவனின் வீரதீர சாகசங்கள் 1030 - 31 ஆண்டுகளில் இட்ட தஞ்சாவூர் கல் வெட்டுகளிலும் திருவாலங்காடு செப்பேடுகளிலும் காணப்படுகின்றன. இதன் காரணமாக அவனுக்குக் "கடாரம் கண்ட சோழன்" என்ற பெயரும் வழங்கத் தொடங்கியது.

மலாயாவில் ஸ்ரீவிஜயா மலாயா மன்னர்களை வீழ்த்தி அண்டை தீவுகளில் தனது ஆதிக்கத்தை நிலை
நாட்டியது. ஸ்ரீவிஜயா ஆட்சியின் தாக்கத்தை மலாய் மொழியிலும்,கலாசாரத்திலும் காண முடியும். மலேசியாவின் கெடா மாநிலத்தில்  தோண்டி எடுக்கப்பட்ட பழங்கால சிவன் கோவில்கள் அதற்குக்  கட்டியம் கூறுகின்றன. சிங்கப்பூரின் அண்டை நாடுகளுடன் பழங்காலந்தொட்டே இந்துக் கலாச்சாரத் தொடர்புகளைக் கொண்டிருந்தன. கி.பி.நான்காவது நூற்றாண்டு முதல் இந்து சாம்ராஜ்யமாக ஜாவா, சுமத்ரா, போர்னியோ, சிங்கப்பூர்,மலாயா, ஆகியவை இருந்ததாகச் சீன நாட்டுப் பயணி இட்சிங் எழுதியுள்ள குறிப்புகளிலிருந்து தெரிய வருகிறது.

சிங்கப்பூருக்கு 14 வது நூற்றாண்டில் வந்த சீன வர்த்தகர் வாங் தா யுவான், சிங்கப்பூரின் துறைமுகத்தையும் வணிகம் பற்றியும் எழுதியிருப்பதுடன், இந்து கோயில் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தாய்லாந்து, பர்மா, கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் உள்ள கோவில்கள் தமிழர்களின் சமய, கலாச்சாரத் தொன்மைச் சிறப்புகளுக்கு எடுத்துக் காட்டாக  உள்ளன. இந்து சமயத்தின் வளர்ச்சிக்குச் சைவமும், வைணவமும் சேர்ந்தே பங்காற்றியுள்ளன.

சர் ஸ்டாம் போர்ட் ராபிள்ஸ் நவீன சிங்கப்பூரைத் தோற்றுவிப்பதற்கு முன்னரே இந்துக் கோயில்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.இன்று குடியரசில் சுமார் நாற்பது இந்துக் கோயில்கள் அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுமார் 25 ஆலயங்கள் செயல்பாடுகளில் இருக்கின்றன. பூஜைகளும்,வழிபாடுகளும் முறைபடி நடந்தேறி வருகின்றன. இவற்றுள் நூற்றாண்டுப் பழைமை வாய்ந்த ஆலயங்களும் உள்ளன. வளர்ந்து வரும் நாட்டின் விரிவுப் பணிகளுக்கு வழிவிட்டு ஆலயங்கள் புதுப்பொலிவு பெற்று திகழ்கிறது.

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பது ஆன்றோர் வாக்கு. அதற்கு இணங்க சிங்கப்பூர்த் தீவில் தமிழர்கள் அடி எடுத்து வைத்த காலம் முதலே ஆலயங்களையும் எழுப்பிவிட்டனர். பிற வல்லரசுகள் தங்கள் வலிமையான கடற்படையுடன் வணிகத் தொடர்புகளை அதிகரித்தன. ஆனால் தமிழர்கள் தென் திசை நாடுகளில் தங்கள் கலை, பண்பாட்டுத் தொடர்புகளையே கொண்டிருந்தனர். அந்தச் சின்னங்கள் இன்றும் நிலைத்து நம் தொன்மையான கலாச்சாரச் சிறப்பை வெளிப்படுத்திக் கொண்டு  இருக்கின்றன.

இந்து சமயத்தின் வளர்ச்சிக்குச் சைவமும் வைணவமும் சேர்ந்தே பங்காற்றியுள்ளன. இந்துக்கள் தங்கள் சமயத்தை எப்போதுமே பலவந்தமாகப் பரப்பியதில்லை.  தென்கிழக்காசியா வட்டாரத்திற்கு இந்து  சமயம் அமைதியான முறையிலேயே பிரவேசமானது.வர்த்தகர்கள், பயணிகள்,கல்விமான்கள்,சமய போதர்கள் போன்றோர் இவ்வாட்டாரத்துக்கு மேற்கொண்ட பயணங்களின் விளைவாக இந்து சிந்தனைகள் இங்கு பரவின. முதலாம் நூற்றாண்டில் இவ்வட்டாரத்தில் செயல்பட்ட இந்தியக் குடியேற்றங்கள் அதற்கு உறுதுணையாக விளங்கின.

வியட்நாமில் இந்து ராஜ்ஜியமான சம்பா கி.பி.159 ஆம் ஆண்டுக்கும் 200-க்கும் இடையில் தோற்றுவிக்கப் பட்டது.சம்பா மன்னன் ஸ்ரீ பத்ரவர்மா இரண்டாம் நூற்றாண்டில் மைசோன் எனும் இடத்தில்,பெரும் இந்துக்கோயிலை எழுப்பியதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.சம்பா அரசில் சமஸ்கிருதம்  அதிகாரத்துவ மொழியாகவும் இருந்தது. தென்கிழக்காசியாவில் வியட்நாமில் செயல்பட்டு வந்த சம்பா பேரரசு, சுமத்ராவில் செயல் பட்டு வந்த விஜயா பேரரசு, ஜாவாவிலும் பாலியிலும் செயல்பட்டு வந்த சிங்கசாரி,  மஜபாஹிட் அரசுகள், பிலிப்பீன்ஸ்சை சேர்ந்த சில தீவுகள் ஆகியவற்றில் இந்து சமயம்  தழைத்து ஓங்கியிருந்தது.

காம்போஜம் என்று இந்தியர்களால் அழைக்கப்பட்ட் கம்போடியா தென்கிழக்காசியாவிலேயே ஆக அதிக இந்து தாக்கமுள்ள நாடு. அங்கு வைணமும் சைவமும் கை கோர்த்து தழைத்தன.சிவபெருமானை வணங்கியது போலவே விஷ்ணுவையும் கம்போடிய மன்னர்கள் வழிபட்டனர்.

கம்போடியாவில் கி.பி.1122-ஆம் முதலாம் நூற்றாண்டில் அமைந்த சிவன் கோயில் அங்கோர் வாட்டில் (Angkor Vat) இன்றும் இருக்கிறது. உலக நினைவுச் சின்னமாகப் போற்றப்படும்  அங்கோர் வாட்டில் இரண்டாவது மன்னன் சூர்ய வர்மன் அந்தக் கோயிலைக் கட்டினான். வைணவத்துடன் இந்த வட்டாரத்தில் சைவ சமயம் கைகோர்த்து வளர்ந்தது என்பது வரலாற்று வல்லுநர்களின் கருத்து. இவ்வட்டாரத்தில் காணப்படும் சிதைந்த நகரங்களும், கோயில்களும் இதர சமயச் சின்னங்களுமே இதற்குச் சான்று. உலகப் பாரம்பரியச் சின்னங்களாக (World Hertiage Monuments) ஐக்கிய நாட்டுச் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

பர்மியர்களிடையே விஷ்ணு வழிபாடு பரவலாகக் காணப்படுகிறது. பல கல்வெட்டுகளில் அதற்கான ஆதாரங்கள்´ உள்ளன. பர்மாவின் பழங்கால தலைநகரமான புரோம் வைணவ வழிபாட்டின் மையமாகத் திகழ்கிறது. புரோம் நகருக்கு "புகநாம்யோம்" என்ற பர்மியப் பெயரும் உண்டு. இதற்கு பொருள் "விஷ்ணுபுரம்" என்றாகும்.

இன்றும் கூட தாய்லாந்து மன்னர்கள் ராமா என்ற அரச பரம்பரைப் பெயரைக் கொண்டுள்ளனர். இராமாயணக் கதை அரச மாளிகையின் சுவர்களை அலங்கரிக்கின்றன. தசரா போன்ற இந்து விழாக்கள் இன்றும் அங்கு அனுசரிக்கப்படுகின்றன.தாய்லாந்து மக்கள் மகா விஷ்ணுவை "பிரா நாராயண்" என்ற பெயரில் வழிபடுகின்றனர். சயாமிய இலக்கியங்களில் இராமாயணத்துக்கும் மகாபாரத்துக்கும் பெரும் பங்கு உள்ளது. இன்றும் கூட தாய்லாந்து மன்னருக்கு முடிசூட்டும் போது திவ்ய பிரபந்தம் போன்ற இந்து மந்திரங்கள் ஓதப்படுகின்றன.

ஜாவாவில் இரண்டாம் நூற்றாண்டிலிருந்து இந்தியர்கள் குடியேறினர். வைணவ சமயத்தின் தாக்கத்தை ஜாவா தீவின் மத்திய பகுதியில் அதிகம் பார்க்க முடிகிறது. போரோப்தூருக்குச் செல்வோர் அருகிலுள்ள சண்டி பாயோன் கோயிலில் பல அழகிய இந்து விக்கிரங்களைக் காண முடியும். ஜாவாவின் ஆகப் பெரிய இந்து கோயில் பெரம்பனான். பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இதில் இராமாயணத்தைச் சித்தரிக்கும் பல சிற்பங்கள் உள்ளன. சுமத்ராவின் ஆகப் பழைமையான சாம்ராஜ்யம் ஸ்ரீ விஜயா. நான்காவது நூற்றாண்டு வாக்கில் அது தோற்றுவிக்கப்பட்டது.

மத்திய ஜாவாவில் பெரம்பனான் என்ற இடத்தில் மூன்று பிரகாரங்களுடன் அமைத்த மிகப்பெரிய சிவன் கோவில் ஒன்று இன்றும் உள்ளது.இது கி.பி. 929-ல் கட்டப்பட்டது.இக்கோயிலை இந்தோனீசியர்கள் "சிவ திஜாண்டி" என்று குறிப்பிடுகின்றனர். ஜோக் ஜகார்த்தாவில் (கி.பி. 775 - 782) அமைந்துள்ள போராப்புதூர் ஆலயம் பல சதுர மைல் கொண்டது. விஷ்ணு ஆலயத்தில் சிவன், திருமால், அம்பாள், விநாயகர் சிலைகள் உள்ளன. இங்கு பிரம்மா, சிவன், விஷ்ணு என மும்மூர்த்தி வணங்கப்படுகின்றர். துர்க்கா தேவிக்குத் தனிக்கோவில் இருக்கின்றது.

பாலித் தீவு இன்றும் இந்து ராஜ்யமாகவே இருந்து வருகிறது.  

சீனாவிலும் இந்து சமயத்தின் தாக்கங்கள் இருந்திருக்கின்றன. அங்கு தென்கிழக்குச் சீனப் பகுதிகளில் இந்து சமுதாயம் இன்றும் இருக்கிறது. இந்து சமயத்தின் யோகம், வர்மக் கலைகள் போன்றவை சீனப்பண்பாட்டில் ஏற்படுத்திய தாக்கம் அதிகம்.

சீனாவின்  "சுன்வுகாங்" என்ற புராண பாத்திரம் அனுமாரைத்தான் உருவகித்தது என்று சொல்வார்களும் உண்டு. சீன அரசியல் மாற்றங்கள் இந்து சமய வளர்ச்சியை அங்கு மட்டுப் படுத்தியது. சீனத்தின் ஒரு பகுதியான திபெத்தில் இந்து சமயம் அதிகமாகவே இருக்கிறது. புத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் கூட,  இந்துசமய நெறிகளைப் பின்பற்றுவதும் இந்து சமய விழாக்களில் பங்கு கொள்வதும் அங்கு அதிகம்.

ஜப்பான் நாட்டிலும் ஓரளவு இந்து சமயத்தின் தாக்கத்தைக் காண்கிறோம். அதிகம் இல்லையெனினும்,  அங்குள்ள புடக்ககோ தமகாகோ கோயிலில் விநாயகப் பெருமான் சிலைகள் இருப்பது இந்து சமயத்தின் பரவலைக் காட்டுகிறது. 13 -ம் நூற்றாண்டில் ஸ்ரீ விஜய சாம்ராஜ்யமாக இந்தோனேசியா இருந்தபோது, துமாசிக் என்ற பெயரில் சிங்கப்பூர் விளங்கியது. பரமேசுவரன் ஆட்சியில் இருந்தான்.அப்போது சிங்கப்பூர் ஆற்றின்  முகத்துவாரத்தில் இந்து கோயில் ஒன்று இருந்தாகக் கூறப்படுகிறது.

13 -ம்  நூற்றாண்டிலிருந்தே சிங்கப்பூரில் இந்து கோயில் இருந்து இருப்பதை வரலாறு நமக்கு காட்டுகிறது. இன்றைய நவீன சிங்கார சிங்கப்பூரில் அமைந்திருக்கும் சில முக்கிய கோயில்களையும், அவற்றின் வரலாற்றையும் வரும் இழையில் காண்போம்.
 

தலபுராணங்கள்


தமிழ் மரபு அறக்கட்டளை , இப்பக்கங்களின் மூலமாக தமிழக கோயில்களின் தலபுராணங்களை உங்களுக்கு பெருமையுடன் வழங்குகிறது.
Welcome to Project Talapuranam of Tamil Heritage Foundation, London, UK.
 இந்தியப் பண்பாடு காலம் கடந்து நிற்பதற்கு புராண, இதிகாசங்கள் முக்கிய காரணம். இந்திய மெஞ்ஞானிகள் கண்டுணர்ந்த அளப்பரிய பேருண்மைகளை, தத்துவங்களை எளிய வடிவில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஊடகம் புராணம். கதை கேட்கும் பழக்கம் என்பது சுவையான மனிதப்பண்பு. எல்லா கலாச்சாரங்களிலும் கதைகளுண்டு. கதைகள் மூலமாகவே செய்திப் பரிமாற்றம் நடக்கிறது. இந்தப் பழக்கத்தை ஒரு யுத்தியாக பயன்படுத்தினர் இந்தியப் பெரியவர்கள். தத்துவங்களை இளகாப் பரிமாணத்தில் (abstract) கொடுத்தால் அது பழக்கப்படாத உள்ளங்களுக்கு போய் சேராது என்று கருதி, தத்துவங்களை கதாபாத்திரங்கள் மீது ஏற்றி புராணக் கதைகளாச் சொல்லிப் போயினர். எனவே புராணங்களை ஒற்றைப் பரிமாணத்தில் வாசித்தல் கூடாது. கதைக்குப் பின்னாலுள்ள தத்துவங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பாரம்பரியத்தில் கோயில் தலபுராணங்கள் விசேஷமானவை. தத்தம் ஊரில் குடிகொண்டிருக்கும் இறைவன் எல்லா வகையிலும் பேரூர் கோயில்களில் குடிகொண்டிருக்கும் இறைவனுக்கு சமமானவன் என்ற உணர்வைக் கொடுத்து உள்ளூர்வாசிகளுக்கு ஒரு தன்னம்பிக்கையை கொடுப்பது தலபுராணங்கள். எல்லோராலும் காசி, ராமேஸ்வரமென்று போகமுடியாது, எனவே உள்ளூர் கோயில் எந்தவகையிலும் இப்பெருங்கோயில்களுக்கு சளைத்ததல்ல என்ற நம்பிக்கையைத் தருவன தல புராணங்கள். மேலும், ஐந்திணைகளாக உலகைப் பகுத்துக் காணும் தமிழ் மரபில், ஒவ்வொரு நில அமைவிற்கும் ஏற்றவாறு இறைப்பண்பு சற்று வேறுபடுவதாகக் கண்டனர். எனவே, வெவ்வேறு பிரதேசங்களில் இறைவனின் திருவிளையாடல் வித்தியாசப் படுகிறது. அதைச் சொல்வதே தலபுராணங்கள். மெய்யானிகளுக்கு அருள் மூலம் இறைவன் இக்காட்சிகளைக் காட்ட, அவர்கள் தலபுராணங்களை எழுதி வைத்தனர். எனவே இவை ஒருவகையில் மறை ஞான (mystical)க்காட்சிகளின் தொகுப்பு என்றும் கூறலாம். இவைகளுக்கு ஒரு கனவுத் தன்மையும் இதனாலுண்டு.

இத்தலபுராணங்கள், அக்கால வழக்கப்படி கவிதை வடிவில் எழுதப்பட்டுள்ளன. தமிழ் புலமை உள்ளவர்களால் எளிதாக வாசித்துப் புரிந்து கொள்ளமுடியும்!

இத்தலபுராணங்கள் தாங்கும் புத்தகங்கள், சுவடிகள் அழிந்து வருகின்றன. சரியான பாதுகாப்பில்லாத சூழலில் இவைகளை இலக்க வடிவில் (digital media) சேமித்து வைப்பதே சாலச் சிறந்தது.

இம்முயற்சிக்கு மூலதனம் வழங்கி எங்களை ஊக்குவித்தவர், லண்டன் மாநகரில் மருத்துவராகப் பணிபுரியும் டாக்டர்.தண்டபாணி அவர்கள். லண்டன் நகரில் தமிழ்த் தொண்டு செய்து மிகப்பிரபலமான திரு.சுவாமிநாதன் அவர்கள் இம்முயற்சிக்கு பக்க பலமாக உள்ளார். இந்த அறக்கொடையை மேற்பார்வையிட்டு சென்னையில் செயல்படுத்தி வருபவர் திரு.ஆண்டோ பீட்டர் அவர்கள். இத்தலபுராண வலைப்பக்கங்களை உருவாக்கி மேற்பார்வை செய்பவர், ஜெர்மனியில் வாழும் சுபா அவர்கள். இம்முயற்சியில் புத்தகங்களை நகலெடுத்து, தட்டச்சு செய்து உதவியவர் சென்னையைச் சேர்ந்த திரு.லோகசுந்தரம் அவர்கள். இம்முயற்சியில் ஆர்வமுடன் இருந்து ஒருங்கிணைப்பவர்கள் டாக்டர்.கு.கல்யாணசுந்தரம் (ஸ்விட்சர்லாந்து); டாக்டர்.நா.கண்ணன் (தென் கொரியா).

This project is a continuation of our on-going digital efforts at archiving Tamil Heritage materials available all around the world. THF-UK has pioneered digitizing ancient tamil books from British Library. From a donation of British Pounds 500, we have initiated a project in Tamilnadu, India to digitize sacred texts of temples called 'Talapuranam'.

Indian temple tradation is one of the oldest in the world. A temple is the principle place of Hindu worship. It is also a place of festivity, an academy and a museum of Tamil art. Each temple has a oral history tradition called 'talapuranam' (ta) or 'sthala purana' (sk). This tradition is based on revelations, myths and legends. It carries with it historical notes as well. During Bakti movement in Tamilnadu, scholars were encouraged to record mystical events connected with each temple to form a local temple story or purana. Such puranas reveal the universality of divine presence. It has a peculiar impact on the local psyche that the local temple is no inferior to any famous temple in the region as the gods residing in their temple is equally powerful. Both Alwars and Nayanmars, the pioneering local saint poets sung poems about sacred temples, recollecting the local myths, adding values to Talapurana.

This project has collections of old books dealing with temple stories or recordings of oral tradition written in Tamil poetic style. This project was conceived by Dr.Thandapani of London, UK. His grant has aided in the collection and digitization of these rare books.

Mr.Anto Peter, Secretary, Tamil Heritage Foundation, India has supervised this project under the assistance of Mr.N.D.Logasundaram (India). Ms.Subashini Kanagasundaram (Germany) has designed and supervised the digital efforts, including this webpages. Dr.K.Kalyanasundaram (Switzerland) and Dr.N.Kannan (South Korea) have managed this project.



செம்பருத்தி / திரு.அ.சுகுமாரன் Oct 18, 2009



செம்பருத்தி பூ பார்க்கறதுக்கு மிகவும் அழகானது. பூஜைக்கு வீடுகளில் பெருவாரியாக பயன் படுகிறது .சித்தர்கள் செம்பருத்தியை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றன. இதனால் இதை தங்க புஷ்பம் என்று அழைக்கின்றனர். வைத்தியத்துக்கும் ரொம்ப சிறப்பானது. 
அதோட வேர், இலை, மொட்டு, பூ எல்லாமே மருத்துவ குணம் நிறைஞ்சதுதான்.
இது பருத்தி வகையைச் சேர்ந்த ஒரு செடி.


இதோட பூக்கள் இரண்டு வகையா இருக்கும். ஒரு வகை பூக்கள் அடுக்கடுக்கா காட்சியளிக்கும். இன்னொரு வகை, தனித்தனியா அகலமா காட்சியளிக்கும்.
இதுதான் மருத்துவ ரீதியில் சிறந்தது. 

இந்தச் செடி எட்டடி உயரம் வரைக்கும் நல்லா செழித்து வளரும். இதோட பூக்கள், வருஷம் முழுக்கப் பூத்துக்கிட்டே இருக்கும்.

 செம்பருத்திப் பூவை சீனாவும் இந்தியாவும் தங்கள் நாட்டு பூ என உரிமை கூறுகிறது
ஆசியாவே இதன் பிறப்பிடம்.  மலேசியாவின் தேசிய மலர் செம்பருத்திதான். மலேசியாவில் அவ்வளவு மதிப்பு செம்பருத்திக்கு .

Tamil : Sembaruthi
English : Shoe flower
Telugu : Javapushpamu
Sanskrit : Japa
Malayalam : Chemparutti-pova
Botanical name : Hibiscus rosa-sinensis

இத்தாவரங்களில் அமிலங்கள், குளுக்கோசைடுகள், ரிபோபிளேவின், கரோட்டின் என பல வேதிப் பொருட்கள் காணப்படுகின்றன.

இலைகள் தசைவலியைப் போக்குவதோடு தசையை மிருதுவாக்கும் தன்மையும் கொண்டவை. இலையின் சாறு தலைவழுக்கை மற்றும் கூந்தலைக் கறுப்பாகவும் உதவுகிறது. மலர்கள் குளிர்ச்சி பொருந்தியவை. சருமத்திற்கு இதமும், சுகமும் அளிப்பவை.
மாதவிடாயைத் தூண்டக் கூடியது.இலைகளை அரைத்து  குளிக்கும் பொது ஷாம்பூ மாதிரி உபயோகிக்கலாம் .உடலுக்கு குளிர்ச்சி .முடிக்கு நல்லது .இதழ்களின் வடிசாறு . சிறுநீர்ப் போக்கு வலியை நீக்கும்.  இனப்பெருக்க உறுப்பு நோய்களுக்கும் மருந்தாகிறது.

கூந்தல் வளாச்சிக்கான தைல தயாரிப்பில் இலைகளும், பூக்களும் பெரும் பங்கு வகிக்கிறது.
காலை எழுந்ததும் 5 முதல் 6 பூக்களின் இதழ்களை மென்று தின்று சிறிது நீர் அருந்தி வர வயிற்றுப்புண் ஆறும். வெள்ளைப் படுதல் நிற்கும். இரத்தம் சுத்தமாகும். இதயம் வலுப்பெறும்.
400 மில்லி நல்ல எண்ணெயில் 100 கிராம் செம்பருத்தி இதழ்களைப் போட்டு கலந்த பாத்திரத்தை மெல்லிய துணியால் மூடிக் கட்டி பத்து நாட்கள் வெயிலில் வைத்து காலை - மாலை எண்ணெயை கலக்கிவிட்டு மூடவும். பிறகு எண்ணெயை வடிகட்டி சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து பத்திப்படுத்திக் கொண்டு தைலத்தை தினமும் தலையில் தேய்த்து தலை வாரி வரவும். இது ஒரு சிறந்த கூந்தல் தைலம்.

இப்பூக்கள் இதயக் கோளாறையும், கர்ப்பக் கோளாறையும் நீக்க வல்லது. செம்பருத்திச் செடி வீட்டில் மருத்துவர் இருப்பதற்குச் சமம். பெண்கள் வீட்டுக்கு விலக்காகும் காலத்தில் அதிக உதிரப் போக்கு இருந்தால் இரண்டு, மூன்று மலர்களை நெய்யில் வதக்கிக் தின்பது குணப்படுத்தும்.

காய்ந்த மலர் இதழ்கள், வெட்டி வேர், துளசி விதைகளை, சுத்தமான தேங்காயெண்ணெயில் ஊறவைத்து தலைக்குத் தேய்த்து வர பேன், பொடுகு அகலும்.

ஐந்து செம்பருத்திப் பூவைக் கொண்டு வந்து ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்துவைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக, இதனைப் பயன்படுத்தலாம். இதனால் உடல் உஷ்ணம் குறைஞ்சுடும். சாதாரண காய்ச்சலுக்கும் இந்த நீரைக் குடித்து நிவாரணம் பெறலாம்.

பூவினை அதிகாலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் பசுவின் பால் சாப்பிட வேண்டும். இதுபோன்று நாற்பது நாட்கள் அதிகாலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் கடுமையான வெட்டை நோய் இருந்தாலும் குணமாகும்.

செம்பருத்திப் பூவை 250 கிராம் கொண்டு வந்து துண்டு துண்டாக நறுக்கி, ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு 50 கிராம் எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்துவிட்டு கலக்கி, காலையில் வெயிலில் வைக்கவும். பின்னர் மாலையில் எடுத்துப் பிசையவும். அப்போது சிவப்பான சாறு வரும். அந்தச் சாறை ஒரு சட்டியில் ஊற்றி சேர்க்க வேண்டிய சர்க்கரையைச் சேர்த்துக் காய்ச்சி சர்பத் செய்து வடிகட்டி ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.
இதிலிருந்து காலை_மாலை இரு வேளைகளிலும் ஒரு ஸ்பூன் எடுத்து 2 அவுன்ஸ் நீரில் கலந்து குடிக்கவும். இதுபோன்று தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தம் சீரான முறையில் பரவும். இருதயமும் பலம் பெறும்.

செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக்கொண்டு இரவு படுத்துக் கொள்ளவும். இதுபோன்று மூன்று_நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள் ஒழிந்துவிடும்.

இயற்கையின் அரிய படைப்புகளில் இந்த பூக்கள்தான் எத்தனை அழகு?

வீட்டின் முன்பும், தோட்டங்களிலும், பூங்காக்களிலும் அழகு சேர்க்கும் . செம்பருத்திப் பூவை காயவைத்து பொடி செய்து காபி, டீ போல காலை மாலை  அருந்தி வந்தால் இரத்தம் தூய்மையடையும், உடல் பளபளப்பாகும்.

நீர் சுருக்கைப் போக்கி சிறுநீரைப் பெருக்கி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு செம்பருத்திப் பூவின் கஷாயம் மருந்தாகிறது. தஙகச்சத்து இப்பூவில் இருப்பதால் தாதுவிருத்திக்கு மிகவும் சிறந்ததாகும். தினமும் 10 பூவினை மென்று தின்று பால்அருந்தினால் நாற்பது நாளில் தாது விருத்தி ஏற்படும்.
 

கிராம தெய்வங்கள் / Village Deities Subashini ஆல் எழுதப்பட்டது Saturday, 06 February 2010 17:59



PDFPrintமின்னஞ்சல்

The Hindu Village deities are found in almost every villages in India, Sri Lanka, Malaysia and other countries where Hindus are living. Among the most popular village deities are Veeran, Sudalai Veeran, Ayyanar, kathavarayan and Mariamman who are considered to be guardian angels of the village.

கிராமத்து தேவதைகள், சிறு தெய்வங்கள் இந்திய, இலங்கை மலேசியா மட்டுமன்றி உலகின் பல நாடுகளில் காணமுடிகின்றது. இப்பகுதியில் இக் கிராம தேவதைகள் பற்றிய சில செய்திகளை இப்பகுதியில் காணலாம்.



திருநெல்வேலி - தாமிரபரணி
விளக்கம், படங்கள்: சுபாஷினி ட்ரெம்மல்

தமிழகத்தின் சிறப்புக்களில் ஒன்றாகத் திகழ்வது தாமிர பரணி ஆறு. இந்த ஆறு செல்லும் கரையோரங்களில் ஆங்காங்கே சில ஆலயங்களைக் காணமுடிகின்றது.  சிறிய ஆலயங்கள் சற்றே பெரிய ஆலயங்கள் என கிராம மக்களின் வழிபடு தலங்கள் பல இப்பகுதியில் இருக்கின்றன. நான் டிசம்பர் 2009ல் திருநெல்வேலி சென்றிந்த போது ஆற்றின் அருகாமையில் எடுக்கபப்ட்ட புகைப்படங்கள் இங்கு உள்ளன. ஒரு அருகாமையில் உள்ள ஒரு கோயிலில் திருவிழா. அதற்காக ஆற்றின் ஓரத்தில் பக்தர்கள் பூஜைக்குத் தயாராகும் காட்சியை காணலாம்.

தாமிரபரணி ஆறு

பூஜைக்குத் தயாராகும் பக்தர்கள்



பூஜை சடங்குகளில் பக்தர்கள்


பூஜை சடங்குகளில் பக்தர்கள்

சிறுவர்கள் திருவிழா மகிழ்ச்சியில்

ஆற்றின் அருகாமையில் சாலையோரத்தில் மயில்




கிராம தேவதைகள், குறி சொல்லுதல் போன்ற கிராமிய வழக்குகள் 
திரு.ஓம் சுப்ரமணியம்

சிலாரூபங்கள் மண்சிலைகள்.முப்பிடாரி அம்மன், செல்லி அம்மன், இசக்கி அம்மன், பச்சையம்மன், பேச்சியம்மன், பலவேசம் இன்னும் பல தெய்வ வடிவங்கள் உள்ளன.இந்த மூர்த்திகள் கற்சிலையாகவும் கோயில் கொண்டிருக்கின்றனர். விழாதோரும் புதிதுபுதிதாக வேளார் அம்மன் சிலைகளும் மண்குதிரைகளும் உருவாக்குகிறார். அதனால் கழிக்கப்பட்ட யானை, குதிரை, பின்னப்பட்டஅம்மன் சிலைகள் குவிந்து கிடக்கும்.

சங்கிலி பூதத்தார், சுடலைமாடன், அய்யனார்,பனையாடியான், கருப்பசாமி, முனீஸ்வரன், மொட்டைக கோபுரத்தான், என்ற மூர்த்திகள் உண்டு.

முகம் கைகால் அங்கங்கள் தெரியாமல் , அடிப்பகுதி சற்றுப் பருத்து, மேலே செல்லச் செல்ல சுருங்கி நான்கு பக்கங்கள் கொண்ட கன ட்ரபீசிய வடிவங்கள் உண்டு. அதில் ஆவாஹனம் செய்யப்பட்ட தெய்வங்களின் பெயர்கள் செவி வழிச் செய்தியாக அறியப்படும்.
ஒரு வளாகத்தில் பல மூர்த்திகள் இருப்பார்கள்.  விழாக்காலம் என்பதை ’கோயில் கொடையிட்டுத் தருதல். என்று அழைப்பார்கள்.

கொடையிடுங் காலங்களில் அந்த தெய்வங்களுக்கு கட்டுப்பட்டவர்கள்; ’’தலைக் கட்டு’’ என்று அழைக்கப்படுகிறார்கள். ஒரு குடும்பத்தில் பெற்றோர் ஒரு தலைக் கட்டு, திருமணமான மகன் குடும்பம் ஒரு தலைக்கட்டு ஆகும். கொடையிட்டுக் கொடுக்கும் போது ஆகும் மொத்தச் செலவு அத்தனை தலைக்கட்டுகளுக்கும் சமமாக பகிர்ந்து விதிக்கப்படும்.

வழக்கமாக ஒவ்வொரு மூர்த்திக்கும் அதன் அடியார்களெனக் கருதப்படும் குறிப்பிட்ட ஒவ்வொரு  குடும்பத்திலுள்ளவர்களுக்கு ஆவேசம் வரும்.

அந்தக் குடும்பத்தில் வழக்கமாக ஆவேசம் வந்து ஆடுபவர் காலமாகிவிட்டால் அவர் குடும்பத்தின் முக்கிய ஆண்மகன் மீது ஆவேசம் வரும். ஆவேசம் கொண்டு ஆடுவோருக்கு அந்தத் தெவத்துக்குரிய ‘சல்லடம்’ என்று அழைக்கப்படும் சீருடைகள் தனித்தனியே உண்டு. அதை அணிவிப்பார்கள். குடிமக்கள் குறைகள் களைய பரிகாரங்கள், இயற்கையின் கொடையான விவசாயியின் கேள்வி மாதமும் பொழியும் மாரியைப் பற்றியதுதான்.

தேரில் அலங்காரம், பெரிய தோரணக் குடை போன்றவற்றிர்க்கு துணி தைப்பவர் தான் இந்தச் சல்லடமும் தைத்து உருவாக்குவார். பாரம்பரிய வழக்கத்துக்கு மாறுபட்டு வேறு ஒரு விருந்தாளிக்கும் தேவாவேசம் வந்துவிட்டால் ’நீ எந்த பீடம்?’ என்று பூசாரி கேட்பார்.

ஆடுபவர், தான் பலவேசம், சுடலை, கருப்பு என்று ஒன்றைச் சொல்வார். ஏளனத்துக்கென எவராவது பொய்யாக ஆவேசம் கொண்டால் சவுக்கினால் அடித்து உண்மையை வரவழைத்துவிடுவார்கள்.வளாகத்திலேயே இல்லாத ஒர் மூர்த்தியின் பெயரை அவர் சொன்னால் சவுக்கடி வழங்கிவிடுவார் ஆவேசம் வந்த மூத்த சாமியாடி.

இதைத்தான் ’பீடம் தெரியாமல் சாமியாடினான்’ என்பது.

இந்தச் சொற்றொடர். அடிப்படை என்னவென்று தெரிந்துகொள்ளாமல் மேம்போக்காகப் பேசிச் செயற்படு வோரைக் குறிக்கவும் நடைமுறையில்  பயன்படுத்துகிறார்கள்.

பம்பை ; என்ற பெயருடைய ஓன்றின் மீது ஒன்றாக வைக்கப்பட்ட இரட்டை மேளம்.முக்கியமாக இடம்பெறும். கீழே இருக்கும் கொட்டு மேளம் ’உறுமி’ எனப்படும். வாசிப்பவருடைய இடது கையில் வளைந்த ஒரு குச்சியால் தேய்க்கும் போது ” வ்ரூம் வ்ரூம்” என்று உறுமுதல் போன்று ஒலி எழுப்பும். வலது கையில் மெலிந்த குச்சி யொன்று ‘ரண்டக்க ரண்டக்க’ என்று ஒலிஎழுப்பும்.நாகஸ்வரம் (நாதஸ்வரம் என்று அழைப்பது பிழையானது என்ற கருத்தும் உண்டு) ஒத்து ஜாலரா ஆகியவையும் வாங்கா,என்ற நீண்ட பித்தளைக் குழல்களும் உண்டு. சேகிண்டி, வெண்சங்கு இத்துடன் உண்டு.
உச்சஸ்தாயியில் அனைத்து வாத்தியங்களும் ஒரு சேர ஒலிஎழுப்பி அவசர கதியில் தொனிக்கும் போது ‘ஆடாத மனமும் உண்டோ?

நான் அனுபவப்பட்டவரையில் அங்கங்கள் அற்ற உருவப் பீடங்கள் (செங்கல் குழை சாந்து, ஆகியவற்றால் செய்து சுண்ணாம்பு பூசி வெள்ளையிடித்திருக்கும்).ஆண் தெய்வங்களுகு மட்டுமே இருக்கின்றன.

பெண் தெய்வத்திற்கு சிற்பி செதுக்காத முழுமையான சிறிய சாதாரணக் கல்லில் ஆவாஹனம் செய்திருப்பார்கள்.’
அய்யனார், முன் கால்கள் தூக்கிய நிலையில் நிற்கும் பெரிய குதிரையில் அமர்ந்திருப்பார். பூதத்தார் பேருருக்கொண்டவர். தலைவன், தலைவி, ஒரு சேய் ஆகிய மூன்று பேருடைய சிலாரூபம் செங்கல்லால், குழை சாந்துச் சுணத்தால் நிர்மாணிக்கப்பட்டிருக்கும்.

கற்குவேல் அய்யனார், ஒரு தெய்வம் கிளிக்கூண்டு ஐயனார்(கோயில் பட்டியிலிருந்து நாலாட்டின்புதூர் போகும் வழியில்வானரமுட்டி என்னும் ஊரில் கோயில் கொண்டுள்ளார். அவர் தலைக்கு மேல் ஒரு கூண்டு அமைக்கப்பட்டிருக்கின்றது.)

வெங்கலமுடி ஐயனார் (திண்டுக்கல்லிலிருந்து நத்தம் செல்லும் சாலையில் சாணார்பட்டியிலிருந்து தனியே பிரிந்து அயயாபட்டி என்னும் ஊரில் விளை நிலங்கள் தாண்டி காட்டிற்குள் கோயில் கொண்டிருகிறார்.)’ என்னத்தக் கண்னையா’ என்ற திரை நடிகர் பிறந்த ஊர்.

அய்யனார் கோயிலின் முன்னர் நெடிதுயர்ந்த காட்டு மரங்கள் இரண்டு உள்ளன ஒரு மரத்தில் ஆயிரக் கணக்கான வெண்கல மணிகள் மாட்டப்பட்டுள்ளன. அவை ஓசை எழுப்பாதவை. காரணம் அந்த மரம் சேவார்த்திகள் கொண்டு மாட்டியிருக்கும் வெண்கல மணிகளை உள்ளே இழுத்து சதை வளர்ந்து வருவது போன்று மரம் வளர்ந்து மணிகளை மூடிவிடுகின்றது.. சிறிய மணிகளை இழுத்துக் கொள்வதைப் போன்று நான்கு அடி நீள இரும்புக் கம்பியில், இரும்புச் சங்கிலியிட்டுத் தொங்கவிட்டிருந்த பெரிய அளவிலான ஒன்றரையடிவெண்கலமணியையும் சட்டம், சங்கிலி,  யாவற்றையும் அதன் இரும்பு நாக்குடன் சேர்த்து மூடியிருக்கின்றது. இரண்டாவது மரம் அதே இனத்தைச் சேர்ந்ததுதான். அந்த மரத்திற்கு இந்தக் குணம் இல்லை.

இராப் பிச்சைக்காரன் (புரத வண்ணான்) என்ற வகுப்பு ஒன்று கிராமங்களில் உண்டு. செட்யூல்டு வகுப்பினரின் சலவைத் தொழிலாளி. அவர்களின் கிராமியத் தொண்டு மிகவும் பிரஸித்தமானது. அவர்கள் பகற்பொழுதில் பணியில் ஈடுபட்டு இரவு ஒவ்வொரு குடியானவர் வீட்டிற்கும் வந்து உணவு பெற்றுச் செல்வர். விழித்திருந்து பிட்சை அளிக்க இயலாதவர்கள். முறத்தில் உணவுப் பொருள்களை வைத்து வீட்டுத் திண்ணையில் தெரியும் படியாக வைத்துச் செல்வார்கள். இராப்பிச்சைக்காரர் இரவு பூசை முடித்துபின்னர்தான் வருவார்கள். மூடிய கதவிற்கு வெளியே குடும்ப அனுகூலச் சங்கதிகளை மொழிந்துவிட்டுச் செல்வார்கள்.

அவர்களைப் போன்று குடுகுடுப்பைக் காரன் என்று ஒரு வகுப்பினர் வருவர். அவர்கள் மாந்த்ரீகம் கற்று நியம நிஷ்டைகளுடன் வலம் வருவர். ஒன்பது கம்பளம் , எண்பது கம்பளம் என்றெல்லாம் அவர்களுக்குள் பிரிவுகள் உண்டு. வசதி மிக்க பணக்காரராக அவர் வாழ்ந்தாலும் ஆறு மாதங்கள் வெளியூர் சென்று பழைய ஆடைகள் பெற்று வருவது அவர்களின் தர்மம். குடும்பச் சிக்கல்கள் நிகழ்ந்து மன உளைச்சலில் இருப்போர்,(  இரவு நடுச் சாமத்தில் இடுகாடு/சுடுகாடு சென்று வழிபாடியற்றி ஆவேச நிலையில் வருகின்ற குடுகுடுப்பை காரரை வாயிலில் நின்று சிறு குடுகுடுப்பையை விரைவாக ஆட்டிக் கவனத்தைத் திருப்பி,சில தெளிவுரைகள் இடையிடையே சுருக்கமாகக் கூறுவர். வீட்டினுள் இருந்தே விவாதித்து கருத்துகள் பரிமாரிக்கொள்வோரும் உண்டு. மறு நாள் வந்து ஜக்கம்மா இவ்வாறு கூறினாள் என்பார்கள்.அந்த சமயங்களில் ஆவேசம் இராது. அவர்கள் இரவில் வரும் போது ஊர் நாய்கள் குரைக்க ஆரம்பித்தால், “ச்சடு”  என்று உரத்த குரலில் ஓங்கரித்துத் காரித் துப்புவது போன்று கத்துவார்கள். நாய் தன்னுடைய குரைக்கும் தொழிலைவிட்டு ஓடிவிடும்.
அல்சேஷன் போன்ற பெரியநாய்கள் குரைத்துக்கொண்டு கம்பிக் கதவை விட்டு வெளியே வந்தால் வாய்க்கட்டு என்ற வித்தை உண்டு. அந்தநாய்களின் வாயினைக் கட்டிவிட்டால் அதன் பின்னர் அது குரைக்கவும் முடியாது. இரைஎடுக்கவும் இயலாது. பணி முடிந்தபின்னர் வாய்க்கட்டை நீக்கிவிடுவது அவர்களின் வழுவாத தர்மம். பயமுறுத்தி பகல் வேளைகளில் வீடுகளுக்கு வந்து, நகைக் கடைத் தெருவில் வாடிக்கையாளர்களை, தக்க நபர்களை அடையாளம் கண்டுகொள்ள மோப்பம் பிடிக்கும் மனிதர்களைப் போல் அசந்து போன பயந்தாங்கொள்ளிகளை வேண்டாத தோஷங்களைச் சொல்லி பரிகாரம் செய்ய வென்று எண்ணெய் மிளகாய் வற்றல் அரிசி பணம் ஆகியவை பெற்று(பிடுங்கிச்) செல்வதும் உண்டு.

சவுக்கின் நுனியில் விளார் என்ற பகுதி இருக்கும். த்னக்குத் தானே அடித்துச் சுண்டுவதில் சில வழிமுறைகள் உண்டு. ஓசையப் பெரிதாக எழுப்பி உடலைத் தொட்டுச் செல்லும் படியும் வீசமுடியும். அடி விழாது. சாதாரணமாக அடித்தால் விளார் உடம்பின் மீது பட்ட இடத்தில் சதையைப் பிய்த்துக் கொண்டுவரும். காலில் சலங்கை கட்டிக்கொண்டு சலம் போடும் அன்பர்கள்(கவுண்டமணி ஒரு படத்தில் அவ்வாறு செய்வார்.) அடி விழுவது மாதிரி காட்டுவார்கள். குங்குமக் கரைசல் உடம்பில் வழியும்.  சாமியாடுபவர்கள் பிரம்பினாலும், சவுக்கினாலும் தன்னைத்தானே அடித்துக் கொள்வதும் ஒரு சம்பிரதாயம்.

நெல்லையிலிருந்து பாபநாசம் செல்லும் வழியில் அம்பாசமுத்திரம் தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ளது. அங்கே சந்தைகு அருகில் நெடுஞ்சாலையை ஒட்டியே சாய்ந்து மல்லார்ந்து படுத்த நிலையில் மண் செங்கல்லால் வடிக்கப்பட்ட ‘வண்டிமறித்த அம்மன்’ என்ற திருநாமம் கொண்ட இரண்டு பெரிய உருவங்கள். அமைந்த கோயில் திறந்த வெளியில் இருக்கிறது. அந்த அம்மனின் மூக்கின் ஒருதுவாரத்தினுள்ளே சிறு குழந்தை சென்றுவரும் அளவிற்கு பெரிய உருவம் .
வெயில் உகந்த அம்மன் கூரையின் அடியில் பிற மூர்த்தங்கள் கோயில் கொண்டிருக்க தான்மட்டும் வெட்ட வெளியில் வெயிலிலும் மழையிலும் நிற்கிறாள்.

பாபநாசம் தாண்டி மேற்குத் தொடர்ச்சி மலையின் பொதிகை மலையில் அகத்தியர் அருவி தாண்டி, வாண தீர்த்தம் அருகில் சொரிமுத்தையன் கோயில் சிறப்பு வாய்ந்தது. மதுரையில் முத்தையா கோயில் , சப்பாணி கோயில் உண்டு.
உசிலம்பட்டியில் பேயாண்டி, மாயாண்டி, விரும்பாண்டி கோயில்கள் உள்ளன.மூன்று கோயில் வழிபாடு. அவை முறையே சிவன், விஷ்ணு, பிரம்மாவைக் குறிக்கும்.

கோடாங்கி ஒரு வகையில் பூசாரி என்பர்.ஒரு தெய்வ ஆகர்ஷனம் உடையவர் என்பர்.  குறி சொல்லுதல் அவர்களது இயல்பு.  அவர்கள் கையில் உடுக்கு(கோடாங்கி) இருக்கும். ஒரு பட்டையான கயிறு இருபக்கங்களையும் இணைக்கும் கயிற்றுப் பின்னலை இடதுகையினால் தளர்த்தியும் இறுக்கியும் வலதுகை விரல்கள் உடுக்கின் தோல்பகுதியில் விரைந்து மோதும்போது ஒலிஎழுப்பும்.   பேச்சின் நடுவே ஒலிஎழுப்பி பேசுவது ஒரு லயம்.  நோய்க்கும் பார் பேய்க்கும் பார்! என்ற சொற்றொடரின் பிற்பகுதி கோடாங்கி. ஒருவரே தொடர்ந்து பேசும் போது சுவாரஸியம் குறைவு.  இடையிடையே கவன ஈர்ப்பாக உடுக்கு அடிப்பார் கோடாங்கி.

மனிதமனத்துக்கு அமைதி தேடி செய்யபடும் ஒரு வகை சங்கீதக் கலை இது ஆழ்ந்த நம்பிக்கையின் அடிப்படையில் அனுபவம் சான்றளிக்க வளரும் ஒருகலை.

இதைப் போலவே ’வில்பாட்டு’  ஒரு கிராமிய கதா காலக்ஷேபம்.கோயில்களில் புராண இதிகாசங்களை எளிய முறையில் எளிய மொழியில் பகிர்ந்தளிப்பது அதன் சிறப்பு. இரவு 11 மணிக்கு மேல்தான் வில்பாட்டு களைகட்டும். ஒரு வயிறகன்ற ம்ண்பானையின் கழுத்தில் நீண்ட வில்லில் ஒரு சலங்கை கோர்த்த கயிற்று நாண்-  கட்டப்பட்டிருக்கும். பானையின் குறுகிய வாயினில் வலதுகையில் மட்டை வைத்து அடித்தும், இடக்கையில் நூல்கண்டு சுற்றும் ராபின் கட்டை ஒன்று விரல்களில் இடுக்கி வைத்தும் தட்டுவார். ஜால்ரா, உடுக்கு, பின்பாட்டுப் பாடும் ஒருவர் ஆகிய குழு உடனிருக்கும். அலுப்புத் தட்டாமல் தூங்கவிடாமல் சங்கீதத்துடன் கதையின் உட்கரு தக்க முறையில் விளக்கப்படும்.

வில்பாட்டு ஆரம்பிக்கும் போது”தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லில் பாட- வில்லில்பாட” என்று முழுமுதல் கடவுள் முந்தி முந்தி விநாயகனைப் பாடி வரிசையாக அனைத்து மூர்த்திகளையும் பாடிகொண்டிருக்கும் போது ஊர்ப் பெரியவரின் மகன் வருவார். மரியாதையின் நிமித்தம் மீண்டும் விநாயகன் தொட்டுப் பாடுவார். சற்று நேரத்தில் மற்றொரு முக்கியஸ்தர் வருவார்.  இவ்வாறாக’ஹசேன் ஹுஸேன்’ என்ற ஆட்டம் போன்று மேற்கொண்டு நகராமல் அந்த இடத்திலேயே பாட்டு நிற்கும். இரவு 10-00 மணி தாண்டிய பின்தான் பாடல் தொடர்ந்து தடையின்றி ஓடும்.

மதுரையில் கள்ளழகரைத் தொடர்ந்து வரும் பக்தகோடிகள் நாய்த்தோலில் நீர் எடுத்துப் பாய்ச்சிக்கொண்டு கள்ளரின் மீதான எளிய சந்தத்தில் பாடல்கள் பாடி ஆராதிப்பர். அந்தப்படல்கள் ஒரு கிராமிய சங்கீதம்.  பழனியில் முருகனைப் பாடி வரும் காவடிச் சிந்து போன்றவை காலத்தால் அழியாதது.

அத்தி


அத்தி 
திரு.அ.சுகுமாரன்

Oct 28, 2009


நான் சிறுவனாக இருந்த போது  எனக்கு பிடித்த புத்தகங்களில் அரபு கதைகள் எனப்படும்1001 இரவுகள் என்னும்  கதைகள் ஹாதிம் தாய் முதலியவன ,முக்கியமானது  ஆகும்
அவைகளில் வரும் கதை மாந்தர்கள் சாப்பிடும் போயதேல்லாம் அத்திப்பழம் சாப்பிடுவதாக வரும் ,.அத்தி பழம் மிக சுவையுடையது போல் பேசப்படும் .

அது அப்போதே என்னக்கு கொஞ்சம் விசித்திரமாக இருக்கும் அத்திப்பழ்தை இப்படி ருசித்து சாப்பிடுகிறார்களே .நமது நாட்டில் இங்ஙனம் அதற்க்கு அத்தனை மதிப்பு இல்லையே என நினைப்பேன்.  அத்தி அராபிய ,ஐரோப்பிய பகுதிகளில் பண்டைய காலத்தில் இருந்தே ஒரு விரும்பப்பட்ட கனியாக  இருந்து வந்திருக்கிறது.

அத்தியைப்பற்றி பைபிளில் குறிப்பு இருக்கிறது குரானில் குறிப்பு இருக்கிறது. அத்தி மரம் அனைத்து மதத்தினருக்கும் தெய்வீக மரமாக அமைந்து இருக்கின்றது. திருக்குரானில் அல்லா அத்தி மரத்தின் மீது சத்தியம் செய்து சொல்கிறான்.   நமது மெய்யியல்   அத்தி வலராற்றில் கலந்துள்ளது.

அத்தி. நவக்கிரகங்களில் வெள்ளிக்கிரகத்திற்காக வணங்கப்படும் மரம். அத்தியைப்பற்றி சில சொலவடையும் உண்டு. அத்தி பூத்தாப்போல , அத்திபழத்தை பிட்டுப்பார்த்த்தார்போலா  முதலியவை வழக்கில் இருக்கிறது . 

நல்ல மணத்துடன் இருந்தாலும் பழத்தை அறுத்தால் அதற்குள் மெல்லிய பூச்சிகள், புழுக்கள் இருக்கும். பொதுவாக பதப்படுத்தாமல் உண்ண முடியாது.  நரசிம்ம அவதாரம் எடுத்த மஹா விஷ்ணு, ஹிரண்யகசிப்புவைக் நரசிம்ம அவதாரம் எடுத்த மஹா விஷ்ணு, ஹிரண்யகசிப்புவைக் கிழித்தக் கொன்றபின், அத்தி மரப்பட்டையில் நகங்களைப் பதித்துச் சுத்தப்படுத்திக் கொண்டார் என்றும் ஒரு நம்பிக்ககை நிலவி வருகிறது.

அத்தி மரத்தை தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள் உண்டு.

திருவொற்றியூர், திருக்கானாட்டு முள்ளூர் ஆகிய திருக்கோயில்களில் 2வது தலவிருட்சமாக அத்திமரம் வணங்கப்படுகிறது.

அத்தி மரம் பல வகைப் பட்டது ..  நாட்டு அத்தி, வெள்ளை அத்தி, நல்ல அத்தி வகைகளும், ஆங்கிலத்தில் (GULAR FIG. COUNTRY FIG. FICUS GLOMERATA, CLUSTER FIG) ஆகிய வகைகளும்  இருக்கிறது .
 

அத்தி நடுத்தர மரமாகும். இது சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளரும். மரப்பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும். இலைகளில் மூன்று நரம்புகள் இருக்கும். முட்டை வடிவில் சற்று நீளமாக இருக்கும். காய்கள் தண்டிலும், கிளைகளிலும். அடிமரத்திலும் கொத்துக் கொத்தாகத் தோன்றும். குளோப் ஜாமூன் அளவில் உருண்டையாக லேசான பச்சை நிறம் கொண்டதாக இருக்கும். காய் பழுத்தபின் கொய்யாப்பழம் போல் லேசான மஞ்சள் நிறத்தில் மாறிவிடும். பழுத்ததும் கீழே உதிர்ந்து விழுந்து விடும்.
சங்க இலக்கியத்தில் ‘அதவம்’ என்றும் கூறப்படும் இச்சிறுமரம், பூத்துக் காய்க்குமாயினும் மலர்கள் வெளிப்படையாகத் தெரியாது. ‘அத்தி பூத்தாற்போல’ என்னும் பழமொழியினாலேயே அத்தி பூக்கும் என்பதாயிற்று.

 இருப்பினும், பிற்கால இலக்கியங்கள் கூறும் “பூவாதே காய்க்கும் மரங்களும் உளவே’ என்பதற்கு எடுத்துக்காட்டு “அத்தி, ஆல்” முதலிய மரங்கள் ஆகும் என்பர்.
உணவாகக் கொள்ளப்படும் அத்திக்காயின் பிஞ்சு, முட்டை வடிவானது. இதற்குள்ளே அத்திப்பூக்கள் நிறைந்திருக்கும். இப்பூக்களைத் தன்னகத்தே கொண்டிருந்தலின் அத்திப்பிஞ்சு - கோளி எனப்படும் தாவரவியல் இதனை ‘ரிசப்டகிள்’ என்று கூறுவர்.
அத்திக்காயின் உள்ள 4 வகையான பூக்கள் உள்ளன. ஆண் பூ, பெண் பூ, மலட்டுப் பூ என்பன. மலட்டுப்பூக்களில் ஆண் மலட்டுப்பூவும், பெண் மலட்டுப் பூவும் ‘ஃபைகஸ் காரிக்கா’ எனும் சிற்றினத்தில் காணப்படுகிறது.

“அதலத் தீங்கனி அன்ன செம்முகத்
துய்த்தலை மந்தி வன்பழற் தூங்க” என் நற்றிணையில் காணலாம்.

அத்திமரம் ஆற்றங்கரையினில் வளரும். இதன் கிளைகள் வெண்ணிறமானவை. இதன் கனி மிக மென்மையானது என்றும் நண்டு மிதித்த இதன் கனி குழையும் என்றும்  குறுந்தொகை கூறுகிறது.

அத்தி மரம் FICUS CARCA, FIG TREE, SEEMAI ATHI, ANJEER என்று அழைக்கப்படுகிறது.
அத்தி மரத்தின் இலை, பால், பழம், அனைத்தும் மருந்தாகப் பயன் அளிக்கின்றன.
 இலைகளை உலரவைத்து பவுடராக்கிக் கொள்ளுங்கள். இதனைத் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன.

 உடலின் எந்தத் துவாரத்தில் இருந்தும் இரத்தம் வெளியேறினால் இது கட்டுப்படுத்தும். வாய்ப்புண், ஈறுகள், சீழ்பிடித்தல் போன்ற நோய்களைக் குணமாக்க இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம்.

மரத்தின் பட்டையை இரவில் உலர வைத்து, காலையில் குடிநீராகக் குடித்தால் வாத நோய், மூட்டு வலிகள் குணப்படும். அழுகிய புண்களைக் கழுவ வெளி மருந்தாக  பயன்படுத்தலாம்.
மரப்பட்டையை இடித்து, பசுவின் மோரில் உலர வைத்து, அதைக் குடித்தால் பெண்களுக்கு அடிக்கடி உண்டாகும் பெரும்பாடு, மாதவிலக்கு கட்டுப்படும்.

அத்திப்பழம், அத்திப்பிஞ்சு, அத்திக்காய் மூன்றையும் சமைத்துச் சாப்பிடலாம். இது மூலம், இரத்த மூலம், வயிற்றுக்கடுப்பு, சீதபேதி, வெள்ளைப் பாடு, வாதநோய்கள், மூட்டுவலி, சர்க்கரை நோய் தொண்டைப் புண், வாய்ப்புண்ணுக்கு நல்ல மருந்தாகும். இது தசைகளை இறுக்கும் குணம் படைத்தவை. பழங்களை இடித்து, அதன் சாற்றைச் சாப்பிடுவதால் சிறுநீரக நோய்களைக் குணப்படுத்த உதவுகின்றன.

அத்திக்கள் அத்திமர வேரில் இருந்து எடுக்கப்படுகிறது. இது சர்க்கரை நோய், மூலநோயைக் குணப்படுத்தும் என்று கூறப்படுகின்றது.

விஞ்ஞானிகள் பழங்களை ஆய்வு செய்து பார்த்ததில் கீழகாணும் சத்துக்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர்.

ஈரம் 13.6%
புரத வகைகள் 7.4%
கொழுப்பு 5.6%
மாவுப்பொருள் 49.00%
வர்ணப் பொருள் 8.5%
நார்ப்பொருள் 17.9%
சாம்பல் 6.5%
இதில் சிலிகா 0.24%
பாஸ்பாரிக் அமிலம் 0.91% ஆகியவை அடங்கி உள்ளன.

கிருத்திகை நட்சத்திரத்தின் கெட்ட கதிர்வீச்சுகள் மனித உடலில் படும்போது பலவகையான உடல் மாற்றம், மன மாற்றம், நோய்கள் உண்டாகின்றன. இதற்கு கிருத்திகை நட்சத்திர தோஷம் என்பார்கள். இந்த தோஷத்தையும், நோய்களையும் நீக்க இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அத்தி மரத்தை 30 நிமிடம் கட்டிப் பிடிக்கலாம். அல்லது அதன் நிழலில் உட்காரலாம்.இவ்வாறு மூலிகை வைத்தியர் அப்துல் கௌஸர் கூறுகிறார்.

தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.   தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.

நாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.  கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப் பழங்களைக் காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைத்து அதனைத் தினமும் இரண்டு பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிடலாம்.
 இலைகளை உலர வைத்துப் பவுடராக்கிக் கொள்ளுங்கள். இதைத் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன.

சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.

அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன்கலந்து மூலநோயைக் குணப்படுத்த மருந்தாகக் கொடுப்பார்கள். மேலும் இவை கல்லீரல் - மண்ணீரல் அடைப்புகள், வீக்கங்களைப் போக்கப் பயன்படுகிறது.

கண்களின் பார்வையைக் கூட்டும் வைட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை அத்திப் பழத்தில் பெருமளவில் அடங்கியிருக்கின்றன. மற்ற பழங்ளைக் காட்டிலும் அத்திப் பழத்தில் 2 முதல் 4 மடங்கு அதிகமாக தாது உப்புகளும், சத்துப் பொருட்களும் அடங்கியிருக்கின்றன. இரும்புச் சத்து அத்திப் பழத்தில் அதிகமாக இருப்பதால், இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இரத்தச் சோகை நோய் வராது. இரத்த உற்பத்தி அதிகரித்து, நோய் எதிர்ப்பாற்றலும் உடலில் அதிகரிக்கும்.

சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும்.

அது என்னமோ நமது இந்து மதத்தில் கடவுளர் ரூபங்கள் செய்து வழிபட அத்தி மரம் பெரிதும் பயன் படுகிறது .

உடுப்பியில் கூட கிருஷ்ணன் சிலை அத்தி மரத்தில் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது .புதுவைக்கு அடுத்த வீரம் பட்டினம் என்ற ஊரில் மீனவ  கிராமத்தில் கடலில் மிதந்து வந்த அத்தி மரம் செங்கேணி அம்மன் சிலையாக செய்யப்பட்டு வழிபடப் படுகிறது .இதன் வருடாந்திர திருவிழக்கம் பிரெஞ்சு காலத்தில் இருந்து புகழ் பெற்றவை .பெரும் கூட்டத்தை ஈர்ப்பவை .

நகரேஷி காஞ்சி  எனப்படும் கோவில் நகரமான காஞ்சியில் பெருமாள் கோவிலான வரதராஜப் பெருமான் கோவிலில் உள்ள தீர்த்தத்தில் அத்திமரத்தால் ஆன வரதாராஜப் பெருமாளை அத்திவரதர் என்றே வழங்குவர். அத்தி பூத்தாற் போல் அவரும் 48 வருஷங்களுக்கு ஒரு முறை 48 நாள்கள் மட்டும் குளத்தில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். அப்போது காஞ்சியே மக்கள் வெள்ளத்தில் எம்பெருமானைக் காண திமிலோகப்படும். பெருமானின் உடல் உஷ்ணத்தைக் காக்கவே நீருக்கு அடியில் உள்ளார் என்றும், அவர் அத்திமரத்தினால் ஆன சிலா ரூபம் சூடுதாங்க முடியாது, அதனால்தான் அவர் நீருக்கடியில் இருக்கிறார் என்றும் கூறுவர்.

அதேபோல் மயிலாடுதுறை அருகே சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ள சிறிய கிராமம் கோழிகுத்தி. இங்கு அத்திமரமே பெருமாளாக விஸ்வரூபக் காட்சியளிக்கும் ஒரே ஆலயம் வானமுட்டிப் பெருமாள் ஆலயம். பேருக்கு ஏற்றாற் போல் எம்பெருமான் விஸ்வரூபமாக சுமார் 14 அடி உயர அத்திமரக் காட்சி பார்க்கப் பார்க்கப் பரவசம். இக்கிராமத்தின் இயற்பெயர் கோடிஹத்தி பாப விமோசனபுரம் என்பதே ஆகும்.

அத்திப் பழத்திற்கு ரத்த அழுத்தத்தை கட்டுப் படுத்தும் சக்தி உண்டு. நன்கு பதப்படுத்தப் பட்ட அத்திப்பழம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.  மற்ற எல்லா மரங்களை விடவும் பறவைகளை ஈர்க்கும் சக்தி அத்தி மரத்திற்கு உள்ளது.

அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.

அத்தி பழம் ஒரு டானிக் மாதிரி ,உடன்பு தேற உடனடி சக்திகள் அதில் ஏராளம் !

திங்கள், 10 ஜனவரி, 2011

தேன் மருத்துவம்

தேன் இயற்கை அளித்த, இல்லந்தோறும் இருக்க  வேண்டிய


தேன்
உணவு. எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், வைட்டமின்களும் தேனில்உண்டு. தேனில் உள்ள சத்துக்கள் சீரான பாதை யில் சுலபமாக கிரகிக்கப்பட்டு விடுகிறது. மேலும் தேனீக்கள் எந்தச் செடியிலிருந்து தேனைச் சேகரித்ததோ அந்தச் செடியின் மருத்துவக் குணத்தை அது பெற்று விடுகிறது. நோய் நீக்கும் மருந்தாக உயர்ந்த உணவாக தேன் உள்ளது.
சித்தர் நூல்களில் பித்தம்வாந்தி, கப சம்பந்தமான நோய்கள், வாயுத் தொல்லை, இரத்தத்தில் உள்ள குற்றங்களை நீக்கி சுத்தம் செய்ய வல்லது தேன் என்று கூறப்பட்டுள்ளது.
கொம்புத்தேன், மலைத்தேன், மரப்பொந்துத்தேன், மனைத்தேன்,புற்றுத்தேன், புதியதேன், பழைய தேன் என ஏழு தேன் வகைகளையும், அவற்றின் மருத்துவ குணங்களையும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.மூலிகைகள், மரங்கள்செடி, கொடிகள் வளர்ந்து நிரம்பிய உயர்ந்த மலையிலிருந்து சேகரிக்கப்படும் மலைத்தேனில் மூலிகையின் மருத்துவக் குணமும் சேர்ந்து இருக்கும். இத்தேன் மருந்துடன் சேர்த்து உண்ணும் அனுபானத்திற்குச் சிறந்ததாக விளங்குகிறது.
மருந்துகளைத்தேன் கலந்து கொடுப்பதால் ஜீரணப் பாதையில் வெகு சீக்கிரமாகமருந்து உறிஞ்சப்பட்டு விடும். இரத்த ஓட்டத்தில் மருந்து விரைவில் செயல் புரியும். மருத்தின் வீரியம் குறையாமல் மருந்தால்வயிறு, குடல்களுக்கு ஏற்படும் பின் விளைவுகளை தேன் தடுத்து நிறுத்தும். தேன் சேர்த்து தயாரித்த மருந்துகள் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். மருந்தின் வீரியமும் கெடுவதில்லை. இந்திய மருத்துவ முறைகளில் தேன் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
சிறியவர் முதல் பெரியவர்வரை பொருந்தும் உணவும், மருந்தும்தேன்தான்.. தேனில் எளிமையாக ஜீரணமாகும் சர்க்கரை சத்துக்கள் இருப்பதால் கடும் உழைப்பாளிகள் விளையாட்டுப் போட்டியில் ஈடுபடுவோர் இடையிடையே தேன் கலந்த பானம் பருகலாம். தேனில் உள்ள சர்க்கரைச் சத்து வாயிலும், குடலிலும் வெகு சீக்கிரத்தில் உறிஞ்சப்பட்டு விடுகிறது. இதனால் உழைப்பின் களைப்பு நீங்கும்.
தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களைச் சீராகவிரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் படைத்தது. அதனால் இதய நோய் இதயத்தில் நுழையபயப்படும்.
எகிப்து நாட்டில் கண் நோய், தோல் நோய் மருத்துவத்தில் தேனைப் பயன்படுத்துகிறார்கள். ரஷ்ய நாட்டின் நாட்டுப்புற மருத்துவத்தில் தேன் முக்கிய இடம் வகிக்கிறது. தேனுடன் பிற உணவுப் பொருட்கள் தானியங்களை ஊற வைத்து உண்ணும் பழக்கம் ரஷ்ய நாட்டில் இன்னும் வழக்கத்தில் உள்ளது.
தேனுடன், இஞ்சி, விதை நீக்கிய பேரீச்சம்பழம் இரண்டையும்

இஞ்சி
ஊறவைத்து நம் நாட்டில் உட்கொள்வார்கள். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், மல பந்தம் நீங்கி, ஜீரணப்பாதை சீராகும்.
அரை டம்ளர் முதல் ஒரு சிறிய டம்ளர் அளவு (50 மி.லி முதல் 100 மி.லி.வரை) ஆறிய வெந்நீரில் அல்லது அதே அளவு கொதித்து ஆறிய பாலில் ஒரு டீஸ்பூன் முதல் மூன்று டீஸ்பூன்வரை தேன் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அருந்துங்கள். குழந்தை முதல் வயதானோர்வரை தேனை உட்கொள் ளலாம். நோய் எதிர்ப்புத் தன்மை பெருகி உடல் ஆரோக்கியம் கிட்டும். படுக்கும் முன் தேன் அருந்தினால் நல்ல உறக்கத்தை நல்கும்.
இரத்த சோகையை அகற்ற:
நாள்தோறும் 100 கிராம் தேன் கலந்த பானம் பருக வேண்டும். தினசரி 100 கிராம் அளவிற்கு மேல் தேன் உட் கொள்ளக் கூடாது. காலை 30 கிராம், மதியம் 40 கிராம், இரவு 30 கிராம் அளவாகப் பிரித்து உட்கொள்ள வேண்டும். ஏதாவதொரு பானத்துடன் சேர்த்து சுமார் ஆறு வாரம் அருந்தி வருவதால் இரத்தத்தில் இரத்த சிவப்பணு (ஹீமோகுளோபின்) அதிகரித்து இரத்த சோகை நீங்கும். மேலும் உடல் அழகையும், குரல்இனிமையையும் பெருக்கும் குணம் தேனிற்கு உண்டு. 100 கிராம் தேனில் சுமார் 355 உடற்சூடு தரும் கலோரிகள் உள்ளன.
தேனை வயிற்றின் நண்பன் என்று குறிப்பிடலாம். ஒன்று முதல்மூன்று டீஸ்பூன் தேனை 100 மி.லி. ஆறிய வெந்நீருடன் கலந்து தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் வெறும் வயிற்றில் உணவு அருந்துவதற்கு முன் பருகி வருவதால் வயிற்றுப்புண், இரப்பை அழற்சி ஈரல், பித்தப்பை நோய்கள் குணமாகும். இரைப்பையில் தேவைக்கு அதிகமாக சுரக்கப்படும் அமிலத்தின் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் அமிலத்தால் வயிற்றுப் புண்ணிற்கு ஏற்படுத்தப்படும் தூண்டுதலைக் குறைத்து, எரிச்சல், வலியை நீக்கும். மேலும் நீர்த்தாரைப் புண், சிறுநீரக, இதய நோய்களையும் தடுக்க வல்லது தேன்.
தேனீ சேகரிக்கும் தேனில் சிறிதளவு மகரந்தமும் கலந்திருக்கும்.பூக்களுக்குத் தக்கவாறு நாடு, காலத்திற்கு ஏற்றவாறும் தேனின் ருசி, மனம், குணம், தடிமன் வேறு படும். குடகு பகுதியில் கிட்டும் ஒரு வகைத் தேன் வெள்ளி நிறத்தில் ஜீனி (சர்க்கரை) கரைத்தது போல் இருக்கும்.
தேன் கூட்டை பிரித்து கையால் பிழித்தெடுக்கும் தேனில் புழு, பூச்சி, தூசி கலந்து இருக்கும். தேன் கூட்டிலிருந்து நேரடியாக ஒழுகும்போது சேகரிக்கப்படும் தேன் சுத்தமான முதல் தரமானது.
சேகரிக்கப்பட்ட தேன் இனிப்பு சுவையுடன் தெளிவாக இளமஞ்சள்நிறத்தில் இருக்கும். நாளடைவில் மங்கிய நிறத்திற்கு மாறி விடும். சுமார் மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரை தேனை வைத்திருந்து சாப்பிடலாம். பழைய தேனும் உட்கொள்ள உகந்த நிலையடைகிறது. நாள் பட வைத்திருந்தும் தேனை பயன்படுத்தலாம். நாள்பட்ட சுத்தமான தேனில் படிகம் ஏற்படும். இதனை நாட்டுப்புற மக்கள் விளைந்த தேன் என்பர். விளைந்த தேனையும் உட்கொள்ளலாம்.
தேனில் உள்ள சர்க்கரை சத்து, வைட்டமின் சத்து, உலோக சத்து உடலுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. அபூர்வமாக சிலருக்கு தேனில் கலந்துள்ள மகரந்தமும், மெழுகும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். தேனில் சிறிதளவு தேன் மெழுகும் கலந்திருக்கும், தேன் மெழுகு உடலுக்கு நன்மை செய்ய வல்லது. தேன் மெழுகு உடலை மெருகேற்றும் தன்மையை பெற்றது. ஆயுளை நீட்டிக்கும் அறிய குணம் தேன் மெழுகிற்கு உண்டு.
தேனிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவையான பானத்தை முனிவர்கள் முதல் தேவர்கள் வரை விரும்பி அருந்தி வந்தனர் என ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரோமானியர்கள் மூல்லும் என்ற பானத்தையும்,ரஷ்யர்கள் லிப்பிடெஸ் என்ற பானத்தையும், கிளாரி பிராகெட் என்ற சுவையான பானத்தை பிரிட்டிசாரும் உபயோகித்து வந்தனர். இவர்கள் உட்கொண்ட பானங்கள் அனைத்தும் தேன் கலந்து செய்யப்பட்டவை என்பதனை மேல் நாட்டு வரலாறுஎடுத்துரைக்கிறது.
தென் ஆப்பிரிக்காவிலும், கிழக்கு ஆப்பிரிக்கா நாட்டிலும் வாழும்சிதேசி இனப் பிரிவினர்கள் தேனிலிருந்து தயாரிக்கப்பட்ட பீர், ஒயின், மதுபான வகைகளை உற்சாகமாக உட்கொள்கிறார்கள்.
டெமோகிரிபியஸ் என்ற கிரேக்க தத்துவ ஞானி, நீண்ட நாள் உயிர் வாழ்ந்த ரகசியத்தை வெளியிட்ட போது அனைவரும் திகைப்படைந்தனர். நான் தினமும் வெந்நீரில் தேனை ஊற்றி அதில் எழும் ஆவியை முகர்ந்து வருகிறேன். இதனால் என்னை நோய் தாக்கத்திலிருந்து காத்துக் கொண்டேன் என்று கூறியிருக்கிறார்.
கீழ் ஆப்பிரிக்காவில் வாழும் வாசாமியா இனத்தவர்கள் தங்கள் சாதிப்பெண்கள் பிரசவித்த பின் தீட்டு நன்கு கழியும்வரை வெந்நீரில் தேன் கலந்து உணவாக அளித்து வருகிறார்கள். இதனால் பிரசவத்தில் ஏற்பட்ட அசதி நீங்குகிறது.
முருகப் பெருமானின் பழனிமலை சன்னிதானத்தில் கிடைக்கும் பஞ்சாமிர் தத்தின் சுவையை நாடெங்கும் பரப்பியது இந்த தேன்தான். இங்கு வருடந்தோரும் வரும் பக்தர்கள் வீடு செல்லும்போது படைத்த பஞ்சாமிர்தம் இல்லாமல் செல்வதில்லை. இதனை தன் குடும்பத்தாருடன் உண்டு. சுற்றத்தாருக்கும் வழங்கி உடல் நலத்தை காப்பாற்றி வருகிறார்கள். உடல் நலமும் கிட்டுகிறது. பஞ்சாமிர்தத்தில் சேரும் பலாப்பழம் எய்ட்ஸ் நோயை எதிர்க்க உடலுக்கு பலன் தருவதாக லண்டனில் கண்டுபிடித் திருக்கிறார்கள்.
தேனில் கலப்படத்தை அறிய சில வழிகள் உள்ளன: 

சிறிதளவு தேனில் தீக்குச்சியை சில வினாடிகள் ஊறவிடுங்கள். மீண்டும் ஊறிய தீக்குச்சியை எடுத்து துடைத்து விட்டு தீப் பெட்டியில் பற்ற வைக்க வேண்டும். குச்சி சீக்கிரம் எரிந்தால் தேனில் சர்க்கரைக் கலப்படம் இல்லை என்பதை அறிய வேண்டும். மை உறிஞ்சும் காகிதத்தில் அல்லது செய்தி வெளியாகும் நாளிதழில் சிறிதளவு தேனை ஊற்றி, சில நிமிடங்கள் வைத்திருங்கள். காகிதத்தின் கீழே தேன் ஊறி இருக்கக் கூடாது. செய்தித்தாளில் தேன் ஊற்றிய இடத்தில் ஊறாவிடில் நல்லதேன். ஒரு கண்ணாடி டம்ளரில் முழுவதும் நீர் பரப்பி அதில் ஒரு தேக் கரண்டி தேனை மேலாக விடுங்கள். தேன் நீரில் கரையாமல் அடியில் சென்று தங்க வேண்டும். நீரில் கரையாவிடில் அது அசல் தேனாகும்.
- சிவகுமார் சித்த மருத்துவர்